Tuesday, June 11, 2024

Bible Quiz -3 (Historical Books from Joshua to II Samuel)

BIBLE QUIZ (3)  

BOOKS OF HOLY BIBLE FROM JOSHUA TO 2 SAMUEL

The Historical Books of the Bible: The 12 books of the Bible from Joshua to Esther are called historical books. The historical books record the important events in Israel’s history, beginning with their entrance into the promised land under the leadership of Joshua to the time of their return from exile from Babylon some 1000 years later. Following questions are taken from Joshua, Judges, Ruth, I Samuel and II Samuel

வரலாற்றுப் புத்தகங்கள்: யோசுவாவிலிருந்து எஸ்தர் வரை உள்ள 12 புத்தகங்களும் வரலாற்றுப் புத்தகங்கள் என அழைக்கப்படுகின்றன. இஸ்ரவேல் தேசத்தின் முக்கிய சம்பவங்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளது. கானான் தேசத்தை சுதந்தரித்தது முதல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த காலக்கட்டம் வரை உள்ள சம்பவங்கள் இதில் அடங்கியுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் யோசுவா முதல் II சாமுவேல் வரை உள்ள ஐந்து புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.

Questions:

1. Who inherited Hebron because he followed the Lord, the God of Israel wholeheartedly?

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், எபிரோனை சுதந்தரமாகப் பெற்றது யார்? 

2. Why was Gideon also called as Jerub-Baal?

கிதியோனுக்கு ஏன் யெருபாகால் என்று பேரிடப்பட்டது? 

3. About whom was it said “All the people of my town know that you are a woman of noble character”?

நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது? 

4. What is the name of the boy who ministered before the Lord wearing a linen ephod?

சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்த பிள்ளையாண்டான் யார்? 

5. Why did the Lord tell David to attack the Philistines as soon as he heard the sound of marching in the tops of the poplar trees?

முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை கேட்கும்போது பெலிஸ்தருக்கு விரோதமாய் எழும்பிப்போ என்று தாவீதிடம் கர்த்தர் ஏன் கூறினார்? 

6. The sun stood still and the moon stopped till the nation avenged itself on its enemies – In which book is it written as mentioned in Joshua?

  ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது சந்திரனும் நின்றது என்று இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா என்று எந்த புஸ்தகத்தைக் குறித்து யோசுவாவில் கூறப்பட்டுள்ளது? 

7. Who was the left-handed man who delivered Israel from Moab?

இஸ்ரவேலை மோவாபியரின் கையிலிருந்து இரட்சித்த இடதுகைப் பழக்கமுள்ள இரட்சகன் யார்? 

8. Who said “Call me Mara, because the Almighty has made my life very bitter”?

நீங்கள் என்னை மாராள் என்று சொல்லுங்கள் - சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார் என்று சொன்னது யார்? 

9. What is the meaning of the name “Ichabod”?

இக்கபோத் என்ற பெயரின் அர்த்தம் என்ன? 

10. Why did the Lord bless Obed-Edom and everything he had?

கர்த்தர் எதின் நிமித்தம் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்? 

11. Who told Joshua “Take off your sandals for the place where you are standing is holy”?

உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்று யோசுவாவிடம் சொன்னது யார்? 

12. Villagers in Israel would not fight and they held back until who arose as a mother in Israel?

 இஸ்ரவேலிலே யார் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப்போயின?     

13. What was the method of legalizing transaction for the redemption and transfer of property to become final in Israel?

     மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்ன? 

 14. Who pretended to be insane before Achish, the Philistine king by making marks on the doors of the gate and letting saliva run down his beard?

ஆகீஸ் என்னும் பெலிஸ்தரின் ராஜாவுக்கு முன்பாக பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து வாசற்கதவுகளிலே கீறிக் கொண்டிருந்து தன் வாயிலிருந்து நுரையை விழப்பண்ணிக் கொண்டிருந்தவன் யார்? 

15. Who was the man exalted by the Most High, the man anointed by the God of Jacob and the sweet psalmist of Israel?

மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின புருஷன் யார்? 

16. Gaza its settlements and villages as far as the Wadi of Egypt belonged to which tribe of Israel according to the book of Joshua?

காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களும் இஸ்ரவேலின் எந்த கோத்திரத்தைச் சார்ந்தது? 

17. What is the name of the place about which Samson said, “With a donkey’s jawbone I have made donkeys of them. With a donkey’s jawbone I have killed a thousand men”?

கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள். கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்று சொல்லி பேரிடப்பட்ட இடம் எது? 

18. Why did God reject Saul as the king of Israel?

சவுல் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராதபடிக்கு கர்த்தர் ஏன் அவனை புறக்கணித்துத் தள்ளினார்? 

19. Whose good advice did the Lord frustrate to bring disaster on Absalom?

அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு யாருடைய நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்? 

20. Who struck down the Philistines till his hand grew tired and froze to the sword?

தன் கைசலித்து தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினது யார்?

Answer key: 

1. Joshua யோசுவா 14:14              

2.Judges நியாயாதிபதிகள் 6:32             

3. Ruth ரூத் 3:11

4. I Samuel 1 சாமுவேல் 2:18          

5. II Samuel 2 சாமுவேல்  5:24               

6. Joshua யோசுவா 10:13

7.Judges நியாயாதிபதிகள் 3:15      

8. Ruth ரூத் 1:20                                   

9. I Samuel 1சாமுவேல் 4:21

10. II Samuel 2 சாமுவேல் 6:12       

11. Joshua யோசுவா 5:15                     

12. Judges நியாயாதி 5:7

13. Ruth ரூத் 4:7                            

14. I Samuel 1 சாமுவேல் 21:13            

15. II Samuel 2 சாமுவேல் 15:5,6

16. Joshua யோசுவா 15:47             

17. Judges நியாயாதி 15:16,17            

18. I Samuel     1 சாமுவேல்15:23,26

19. II Samuel 2 சாமுவேல் 17:14     

20. II Samuel 2 சாமுவேல் 23:10

  

No comments:

Post a Comment